• Tue. Jun 16th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

கொத்துக்கொத்தாய் துள்ளிவந்து விழும் மீன்களுக்கு தூண்டில் தேவையில்லை எம்.வி.கருப்பையா எம்.எல்.ஏ., பேட்டி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம். வீ. கருப்பையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் பணநாயகத்திற்குவாய்ப்பளிக்காத
ஜனநாயக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து புதிய வரலாறு படைத்துள்ளது. இங்கு யாரும் எதிர் பார்க்காத வகையில் தி.மு.க., அ.தி.மு. க.,வுக்கு மாற்றாக யாரவது வர மாட்டா ர்களா என்று ஏங்கித் தவித்த பொது மக்களின் ஏக்கத்தை போக்கவும், ஏற்ற முடன்மாற்றத்தை உருவாக்கவும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தை தொடங்கினார்.

தமிழக முதல்வர் தளபதி ஜோசப் விஜய். இதில் வாரிசு அரசியலை ஒழிக்கவும் தீய சக்தி தி.மு.க.விடம் இருந்து தமிழகத்தை மீட்கவும்,ஏற்ற தாழ்வு இன்றி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவும் ஏழை எளியோர் வாழ்வு உயரவும், கொள்கை தலைவர் களின் இலட்சிய கனவான சமூக நீதியை நிலை நாட்டவும் தேர்தலில் களம் கண்டார் மூன்றெழுத்து மந்திரத்துக்கு சொந்தக்காரர். பணபலம் கொண்டவர்களுக்கு முன்னால் மக்கள் பலத்தை நம்பினார், சாமானியர்கள், எளியோர்கள், உழைப்பாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் வேறுபாடு காணாமல் அனைவரையும் தேர்தலில் போட்டியிட வைத்து மாற்றம் காண விரும்பிய மக்களின் ஒரு விரல் புரட்சியால் சட்டமன்ற உறுப்பினர்களாக மகுடம் சூடவைத்தார்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பதைப் போல எனக்கும் வாய்ப்பளித்து வரலாற்று சிறப்பு மிக்க மாமன்றத்தில் தற்காலிக சபாநாயகராக அமர வைத்து அழகு பார்த்து ஒரே நாளில் உலகறிய செய்து வியக்க வைத்தார். முதல்வராக பொறுப்பேற்றவுடன் எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்கட்சி தலைவர்களை எதிரி என்று பார்க்காமல் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை உணர்த்தும் விதமாக
வெற்றிக்கு வித்திட்டவர்களாய் நினைத்துநேரில் சென்று வாழ்ந்து பெற்றுஅரசியல் வரலாற்றில் இல்லாத சாதனையை நிகழ்த்தினார்.

மேலும் கூட்டணிக் கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்களித்து அமைச்சரவையில் இடம் பெறச் வைத்து எந்த கட்சியும் செய்ய தயங்கியதை துணிச்சலுடன் செய்தார். இந்த சரித்திர போற்றும் சாதனையாலே இரண்டு அடிகளில் சுருங்க கூறி விளக்கம் தரும் குறுக தறித்த குறள் போலே இரண்டரை ஆண்டுகளில் மக்கள் மனதில் இடம் பிடித்து கடல் போல் பறந்து விரிந்த மனம் கொண்ட தமிழக முதல்வராக தடம் பதித்ததைகண்டு கொத்துக் கொத்தாகதுள்ளி வரும் மீன்களாய் மாற்றுக் கட்சியினர் தாமாக வந்து இணைவதை பொறுத்துக் கொள்ளாதவர்கள் புழு போட்டு மீன்பிடிப்பதாக புலம்புவது வேதனைக்குரியது. இங்கு கொத்துக்கொத்தாய் துள்ளி வந்து விழும் மீன்களுக்கு தூண்டில் தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.