பிரதமர் மோடி 3 ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.ஜெர்மனி ,டென்மார்க் நாடுகளுக்கு அடுத்ததாக பிரான்ஸ் சென்றள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
முன்னதாக டென்மார்க்கில் கோபன்ஹேகன் நகரில் உள்ள கிறிஸ்டியன்ஸ்போர்க் அரண்மனையில் நடைபெற்ற, 2வது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு இறுதியாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை தலைநகர் பாரிஸில் இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். அதன்பிறகு பிரெஞ்சு அதிபரின் அதிகாரப் பூர்வ இல்லமான எலிசீ அரண்மனைக்கு சென்ற மோடியை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கட்டிப்பிடித்து வரவேற்றார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எனது நண்பர் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திப்பதில் எப்போதும் போல் மகிழ்ச்சி என்றும், இருதரப்பு மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து நாங்கள் நீண்ட நேரம் பேசினோம் என்றும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, விரைவில் இந்தியா வருமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக மத்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.