• Fri. Mar 29th, 2024

கொரோனா 4-வது அலை இப்போதைக்கு இல்லை: மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

ByA.Tamilselvan

May 2, 2022

இந்தியாவில்ஜூன்மாதம் கொரனா தொற்று உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா 4-வது அலை இன்னும் உருவாகவில்லை என்றும் சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,324 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நாளில் 3,688 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்ததை விட சற்று குறைவாகும்.கடந்த சிலநாட்களாக ஏறுமுகமாக இருந்த கொரோனா தொற்று நேற்று குறைய தொடங்கியுள்ளது.வரும் ஜூன் மாதம் கொரோனா தொற்று உச்சம் தொடும் என எதிர்பார்த்த நிலையில் தற்போதைக்கு 4 அலைஇல்லை என இந்திய மருத்தவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவல் மக்களை மகிழ்ச்சியடைய்செய்துள்ளது.
இதுகுறித்து ஐசிஎம்ஆர் கூடுதல் இயக்குநர் டாக்டர் சமிரன் பாண்டா நேற்று கூறிய போது: “தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. எனினும், இது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே (உள்ளூர் அளவில்) அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பரவலாக பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை கொரோனா 4-வது அலைக்கான அறிகுறி உருவாகவில்லை.
கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவோரில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம்அதிகரித்து வருவது உண்மைதான். ஆனால், சோதனை செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம். உதாரணமாக டெல்லியில் கரோனா சோதனையை அதிகரித்த பிறகு, தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 7-லிருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளது”. என தெரிவித்துள்ளார்.
ஆக தற்போதைக்கு கொரோனா 4 அலை இல்லை என்பது சற்றே மகிழ்ச்சியளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *