• Fri. Mar 29th, 2024

ஜனாதிபதி தேர்தல் ஆலோசனை- மு.க.ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு

ByA.Tamilselvan

Jun 12, 2022

இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியானராம்நாத்கோவிந்தின் பதிவிகாலம் முடியவுள்ள தருவாயில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.பாஜக சார்பில் இஸ்லாமியர் நிறுத்தப்படலாம் என எதிப்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகள் வேட்பாளர் வெற்றிபெறுவது கடினம் என்றாலும் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு இது ஒரு துவக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் வரும் 15ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் அனைத்து மாநில எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். தேர்தலில் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 21ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள் தீவிரமடைந்து உள்ளன.
அதே சமயம், பாஜவுக்கு நெருக்கடி தர, எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டியது அவசியம். காங்கிரசை பொறுத்த வரையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை பொது வேட்பாளராக நிறுத்த விரும்புகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் களமிறங்கி உள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசனை நடத்த வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ,சோனியாகாந்தி உட்பட 22 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்களுக்கு அவர் நேற்று கடிதம் அனுப்பி உள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கே அதிக வாய்ப்புகள் உள்லநிலையிலும் எதிக்கட்சிகள் போட்டி வேட்பாளரை நிறுத்த முயற்சிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *