• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ஜனாதிபதி முர்மு முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரை

ByA.Tamilselvan

Jan 25, 2023

குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதல்முறையாக நாட்டுமக்களிடையே
உரையாற்றுகிறார்.
74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) உரை ஆற்றுகிறார். ஜனாதிபதி மாளிகை நேற்று விடுத்த அறிக்கையில், “நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி 25-ந்தேதி இரவு 7 மணிக்கு உரை ஆற்றுகிறார். இதை அகில இந்திய வானொலி தனது அனைத்து அலைவரிசையிலும் நேரடியாக ஒலிபரப்புகிறது. இதே போன்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்தியிலான இந்த உரையைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் வரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூர்தர்ஷன் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் ஜனாதிபதியின் உரையை ஒளிபரப்பும். அகில இந்திய வானொலியிலும் இரவு 9.30 மணிக்கு மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை ஒலிபரப்பாகிறது. ஜனாதிபதி முர்மு பதவி ஏற்ற பிறகு குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.