நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டர்ன் விலகிய நிலையில் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுக்கொண்டார்.
நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டர்ன் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் முடிய இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்தார். பிரதமருக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதைதொடர்ந்து, நியூசிலாந்து நாட்டின் கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் 41வது புதிய பிரதமராக இன்று பதவியேற்றுள்ளார்.
நியூசிலாந்தின் பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார்
