• Thu. Apr 25th, 2024

தென்காசி அருகே முகமூடி கொள்ளை – பொதுமக்கள் அச்சம்

Byஜெபராஜ்

Jan 25, 2023

தென்காசி மாவட்டம் டி என் புதுக்குடி காமராஜர் சிலை அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் நேற்று அதிகாலை பூட்டை திறந்து 33 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது
.டி என் புதுக்குடி காமராஜர் சிலை அருகில் கடந்த 25 வருடங்களாக மெடிக்கல் ஸ்டோர் இயங்கி வருகிறது. நேற்று இரவு பத்து மணி அளவில் கடை உரிமையாளர் மாரியப்பன் மற்றும் அவரது மகன் தெய்வலால் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டனர் .இந்த நிலையில் காலை 9 மணிக்கு மேல் வந்து பார்க்கும் பொழுது பூட்டு உடைக்கப்படாமல் கடை சட்டர்  திறக்கப்பட்டு இருப்பதை கண்டு கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது மேஜை டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் 33 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது உடனடியாக இது பற்றி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .. தகவல் அறிந்து  விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் , எஸ்ஐ செல்வ மாணிக்கம் உள்ளே சென்று ஆய்வு செய்தனர் .


மேலும் தென்காசி கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு தடயங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர் .காவல்துறையினர் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையடித்த மர்ம நபர் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கடை அருகே உள்ள ஒரு  கோவிலிலும் அதே இரவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது  குறிப்பிடத்தக்கது. பரபரப்பான தேசிய நெடுஞ்சாலை செல்லும் புளியங்குடி மத்திய பகுதியில் கொள்ளை நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவே காவல்துறையினர்  இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
கொள்ளை நடைபெற்ற மருந்து கடையில் சிசிடிவி காமெரா வேலை செய்ய வில்லை .. அருகில் உள்ள கடையில் உள்ள பதிவுகளை வைத்து ஆய்வு செய்ததில் ஒரு கொள்ளையன் தலை மற்றும் முகத்தை மூடி சுமார் இரவு இரண்டு மணி அளவில் கடையை திறந்து உள்ளே செல்வது பதிவாகி உள்ளது கொள்ளையன் பணத்தை எடுக்கும் போது பில் போடுவதற்காக வைத்து இருந்த டேப்லேட் யும் எடுத்து சென்றான் பின் அதனை அருகிலுள்ள டீ கடையில் போட்டு விட்டு சென்று விட்டான் .போலீசார் கோவில் உண்டியலை உடைத்தவனும் , மருந்து கடையில் கொள்ளை அடித்தவனும் ஒரே நபர் தானா என்று ஆய்வு செய்து வருகின்றனர். வியாபாரிகளும் கடையில் பெயருக்கு சிசிடிவி காமெராக்களை பொறுத்தி பின் அதனை முறையாக பரமாரிக்காமல் விட்டு விடுகின்றனர் அதனால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது மேலும் புளியங்குடியில் மெயின் ரோட்டில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படுள்ள பல்வேறு சிசிடிவி காமெராக்களும் முறையான பராமரிப்பு இன்றி காணப்படுகிறது இதனை சரி செய்வதன் மூலமாக குற்றங்களை தடுக்கவும் ,குற்றவாளிகளை அடையாளம் காணவும் முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *