• Thu. Apr 18th, 2024

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

ByA.Tamilselvan

Jul 4, 2022

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை மாமல்லபுரத்தில் வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ. இறை யன்பு மாமல்ல புரம் சென்று பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநிலஅரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி களின் ஒரு பகுதியாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடை பெறும் நிகழ்ச்சிகளின் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டிக் கான விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அமைக்கப் பட்டுள்ள பேருந்திலேயே பயணம் மேற்கொண்டு, இப்போட்டியில் பங்கு பெற உள்ள போட்டியாளர்கள்,பங்கேற் பாளர்கள் பயணிக்கும் வழித்த டங்களை ஆய்வு செய்தார். மேலும், மின் வாரியப் பணிகள், சுகாதாரப் பணிகள், உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, மாமல்ல புரம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழ கத்தில் அமைப்பட்டுள்ள கட்டுப் பாட்டு அறையினையும், பூஞ்சேரி பகுதி யில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டிக்காக சர்வதேச தரத்தில் 52,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட வுள்ள நவீன விளையாட்டு அரங்கத் தினையும், ஏற்கனவே அமைக்கப்பட் டுள்ள அரங்கத்தின் மேம்பாட்டுப் பணி களையும் தலைமைச் செயலாளர் பார்வையிட்டார். மாமல்லபுரத்தில் பகுதியில் உள்ள தாமரைக்குளத்தை பார்வையிட்டு, அதன் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் மாமல்லபுரம், பேருந்து நிறுத்தும் இடத்தில் வைக்கப் பட்டுள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டிக்கான விளம்பரப் பணி களைப் பார்வையிட்டார். மேலும், மாமல்லபுரம், கடற்கரை கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளையும், குளம் சீரமைப்புப் பணிகளையும் பார்வை யிட்டார். இறுதியாக, சென்னை விமான நிலையத்தில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டிக்கு வருகை தரவுள்ள போட்டியாளர்களை வர வேற்று அழைத்துச் செல்லக்கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரி களிடம் கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *