• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பிரளயநாத சிவன் கோவிலில் பிரதோஷ விழா..,கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம்..!

ByKalamegam Viswanathan

Nov 25, 2023
மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளயனாத சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடந்தது. கொட்டும் மழையில் பிரதோஷ விழா நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.இதைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று அம்பாலும் சுவாமியும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிறப்பு பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் எம்விஎம் குழுமத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரதோஷ விழா நடைபெற்ற போது தொடர்ந்து மழை பெய்ததால் பெண்கள் மற்றும் பக்தர்கள் மழையில் நனைந்தவாறு சாமி தரிசனம் செய்தனர்