• Mon. Mar 17th, 2025

கைலாக் காரின் முதல் விற்பனையில் 25 கார்களை பெற்று கொண்ட வாடிக்கையாளர்

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக “ஸ்கோடா”கார் உற்பத்தி நிறுவனம் தரமான பெட்ரோலில் மட்டுமே இயங்கும் பல வகையான கார்களை உற்பத்தி செய்து, அவர்களது வாடிக்கையாளர்களின் நல்ல மதிப்பை பெற்றுவரும் ஸ்கோடோ நிறுவனம்.அண்மையில் புதிதாக “கைலாக்”என்னும் பெயரில், பல்வேறு வடிவத்தில் உருவாக்கியுள்ள வாகனங்களின், தொடக்க விலை ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் முதல் உச்சபட்ச விலை ரூ.14 லட்சத்து 75ம் வரையிலான புதிய கைலாக் கார் பல்வேறு பட்ட கார் காதலர்களின் எண்ணத்திற்கு ஏற்ப தயாரித்து அதன் முதல் விற்பனையை கன்னியாகுமரி மூன்று கடல்கள் சந்திக்கும் பகுதியில் எங்களின் வாடிக்கையாளர்களிடம் இன்று ((பெப்ரவரி_27)ம் தேதி கொடுப்பது என திட்டம் இட்டோம்.

எங்களின் திட்டத்தை நிறைவேற்ற, திருநெல்வேலி ஆரா ஸ்கோடா, மதுரை மாலிக் ஸ்கோடா விற்பனை பிரதிகளின் நிறுவனங்கள் சார்பாக, இந்த இரண்டு விற்பனை பிரதிநிதிகள் இடம் 25_க்கும் அதிகமானவர்கள் கார் முன்பதிவு செய்தவர்களுக்கு கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அவர்களின் கனவு வாகனத்தை ஒப்படைக்கும் நிகழ்வின், முதல் நிகழ்ச்சியாக, கன்னியாகுமரியில் உள்ள அன்னை நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், குமரி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் தாமஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று எங்களின் இந்த முயற்சியை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்து. கைலாக் காரை வாங்கிய எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது “காரின்” சாவியை வழங்கினார்கள் என்ற தகவல்களை ஸ்கோடா செயல் அதிகாரி அஜய் பிரஷாந்த் செய்தியாளர்கள் இடம் தெரிவித்தார்.

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் 15_கார்களும் மலர் மாலையுடன் வரிசையாக நிற்க.கார் வரிசைகளுக்கு பின்னால் நீண்ட நீலக்கடலும், வான் தொடும் ஐயன் திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், புதிதாக கடலில் கட்டப்பட்ட கண்ணாடி பாலமும் பின்னணியில் கண்களுக்கு விருந்து காட்சியாக விரிசையில் பல வண்ணத்தில்.புதிய கைலாக் புதிய வாகனங்கள் வரிசையில் அதன் முதல் பயணத்தை,பணியை.கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தென் கோடி பகுதியில் இருந்து புதிய கைலாக் வாகனங்களின் வரிசையான சாலைப் பயணத்தை பன்மொழி சுற்றுலா பயணிகளின் கண்களை அகல விரியச்செய்தது.