• Tue. Dec 10th, 2024

தேனி மாவட்டத்தில் ‘மக்கள் குறை தீர்க்கும் முகாம்’ ஒத்திவைப்பு; கலெக்டர் தகவல்

தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் வெளியிடுள்ள பத்திரிகை செய்தியில்:
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சூழ்நிலையில், நோய் தொற்றுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நாளில் நடைபெற்று வந்த ‘மக்கள் குறை தீர்க்கும் முகாம்’ தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மறு தேதி அறிவிக்கும் வரை இது தொடரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.