• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட துணை ஆட்சியா்..,

ByK Kaliraj

Jun 16, 2026

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (வருவாய் கிராம கணக்குகள் தணிக்கை) இரண்டாம் நாளான இன்று வருவாய் தீர்வாய அலுவலர்/ தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி.), விருதுநகா் அவர்களால் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மேற்படி பெறப்பட்ட மனுக்களில் 4 பட்டாமாறுதல் கோாிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு, மேற்படி பயனாளிகளுக்கு வருவாய் தீா்வாய அலுவலா் அவா்களால் பட்டா உத்தரவு வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக வருவாய் தீர்வாய அலுவலர்/ தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி.), விருதுநகா் அவர்களால் வெம்பக்கோட்டை வட்டம், கீழாண்மறைநாடு வருவாய் கிராமத்திற்குட்பட்ட 17 பயனாளிகளுக்கு இணைய வழி இ-பட்டாக்கள் வழங்கப்பட்டு ஆலங்குளம் குறுவட்டத்திற்குட்பட்ட கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது.