

தேனி மாவட்ட ‘இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி’ சார்பில் தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் போன்ற வைரஸ் தொற்றுகள் வேகமெடுத்துள்ளது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இச்சூழ்நிலையில் தேனி மாவட்ட ‘இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி’ சார்பில் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தினமும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று (ஜன.8) காலை 9 மணிக்கு தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரோடு ‘மாஸ்க்’ சேர்த்து இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் நோய் தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முகக்கவசம் (மாஸ்க்) அவசியம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் K. சுருளிவேல் கூறுகையில்,” மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி கபசுர குடிநீர் மற்றும் ‘மாஸ்க்’ இலவசமாக வழங்குகிறோம். இன்று (ஜன.8) நடந்த முகாமில், தேனி அம்மா உணவக ஊழியர் 20 பேருக்கு சுகாதார பெட்டகம் இலவசமாக வழங்கப்பட்டது” என்றார். நிர்வாக குழு உறுப்பினர்கள் சிதம்பரம், ராமராஜ், வி.பி., அழகேசன், வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
