தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும், ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்ட நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வகைதொகையின்றி எவரெஸ்ட் போல் உயர்ந்து கொண்டிருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.