• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

ByA.Tamilselvan

Oct 18, 2022

பிரபல நடிகை சித்தாரா, 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடிகை சித்தாரா நடித்துள்ளார். இதனை தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பத்துக்கும் அதிகமான மெகா சீரியல்களில் நடித்திருக்கிறார். 1989இல் வெளியான புது புது அர்த்தங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழில் சித்தாரா அறிமுகமானார். இதன்பின்னர் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, புது புது ராகங்கள், புது வசந்தம், புரியாத புதிர், ஒரு வீடு இரு வாசல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.


2014-இல் வெளியான விஷாலின் பூஜை திரைப்படத்தில் நடித்த சித்தாரா, அதன் பிறகு 2018 இல் வெளியான நாகேஷ் திரையரங்கம் படத்தில் ஹீரோ ஆரி அர்ஜுனனுக்கு அம்மா கேரக்டரில் நடித்தார். இதன்பின்னர் எந்த தமிழ் சினிமாவிலும் நடிக்கவில்லை. இந்நிலையில், தற்போது ஹிட் லிஸ்ட் என்ற படத்தில் சித்தாரா நடிக்கிறார். ஹிட் லிஸ்ட் படத்தில் ஹீரோவாக இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடிக்கிறார். அவருடன் படத்தில் கே.எஸ். ரவிகுமார், சரத்குமார் முனிஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, கேஜிஎஃப் வில்லன் ராமச்சந்திரா, மைம் கோபி உள்ளிட்டோர் நடிக்கின்னர். படத்தை சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.