• Mon. Sep 25th, 2023

பாஜகவிலிருந்து பிரபல நடிகர் விலகல்…

Byகாயத்ரி

Nov 9, 2021

பிரபல நடிகரான ஜாய் பானர்ஜி, கடந்த 2014-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். கட்சி சார்பில் 2 முறை எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.


இந்த நிலையில் கட்சியில் சமீப காலமாக தான் புறக்கணிக்கப்படுவதாகவும், எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘சாதாரண மக்களுக்காக உழைக்க நான் விரும்பினேன். ஆனால் தொடர்ந்து நான் பாஜகவிலேயே இருந்தால் அது முடியாது. கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து என்னை நீக்கியதன் மூலம், எனது பாதுகாப்பையும் கட்சித்தலைமை எடுத்துக்கொண்டுள்ளது’ என குற்றம் சாட்டினார்.


கட்சிக்காக மேலும் தீவிரமாக பணியாற்ற விரும்புவதாக கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாக கூறிய ஜாய் பானர்ஜி, ஆனால் அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும், கட்சியில் இனியும் புறக்கணிக்கப்படுவதை பொறுக்க முடியாது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *