

பாரதிய ஜனதா கட்சியிழன் மூத்த தலைவரான அத்வானியின், 94வது பிறந்த நாளான நேற்று, அவரது வீட்டிற்கு நேரில் சென்று, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி, தனது 94வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
டில்லியில் உள்ள அத்வானியின் வீட்டிற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். கடந்த, 2014ல் பிரதமராக பதவி ஏற்றது முதல், ஒவ்வொரு ஆண்டும் அத்வானியின் பிறந்த நாளில் அவரது வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவிப்பதை பிரதமர் மோடி வழக்கமாக வைத்துள்ளார்.
