உக்ரைன் நாடு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடாகும். தற்போது உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து ரோம் நகரில் உள்ள வாடிகன் தேவாலயத்தில் இன்று நடந்த பொது பார்வையாளர்கள் கூட்டத்தில் சோகம் நிறைந்த குரலில் பேசிய போப் பிரான்சிஸ் “உக்ரைனில் நிலவி வரும் சூழல் தனது இதயத்தில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.மேலும் சர்வதேச சட்டத்தை இழிவுபடுத்தும் செயலை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அரசியல்வாதிகள் தங்கள் செயல்களின் விளைவுகளை பற்றி கடவுளுக்கு முன்பாக தங்கள் மனசாட்சியை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் மார்ச் மாதம் இரண்டாம் தேதி சாம்பல் புதன் கிழமையை அமைதிக்கான உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனைக்கான சர்வதேச தினமாக கடைபிடிக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமைதிப்படையை உக்ரைன் பகுதிகளுக்கு செல்ல உத்தரவிட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு போப் பிரான்சிஸ் இன்று கருத்து தெரிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.