தற்போது நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. அவர் அதற்கு முன் தமிழில் முகமூடி படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் வெற்றிபெறவில்லை, அதன் தெலுங்கு ஹிந்தி என பிசியாக இருந்த அவர் தற்போது மீண்டும் தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.
தெலுங்கில் அவர் நடித்த ஆலா வைகுந்தபுரம்லோ என்ற படம் பெரிய ஹிட் ஆனது. அதிலும் குறிப்பாக அந்த படத்தில் வரும் புட்ட பொம்மா பாடல் மிகப்பெரிய ஹிட். தற்போது அந்த படம் வந்து 2 வருடங்கள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் பூஜா ஹெக்டே ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ரெடி ஆகி கொண்டிருக்கும்போது அல்லு அர்ஜுன் மகள் அர்ஹா உடன் டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த வீடியோவை தான் அவர் தற்போது பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலா ஆகி வருகிறது.