உலகில் கொரோனா என்கிற வைரஸ் கொடிய நோயாக உருமாற்றம் செய்யப்பட்ட பின் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கிப்போனதுமக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை உலக சுகாதார மையம் அந்தந்த நாட்டு அரசுகள் மூலம் மக்களுக்கு கூறிவருகிறது இதனை நேர்பட கேட்டு நடக்கும் நகர வாசிகள் நரக வாழ்க்கையையும், கேட்காத கிராமவாசி ஆரோக்கியமாக திடகாத்திரமாக வாழ்க்கையை அனுபவித்து வருகிறான் இவர்களை தங்களின் வாடிக்கையாளர்களாக கொண்ட சினிமா கடந்த இருவருடங்களாக முடங்கியிருந்தது இந்த வருடம் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று நான்கு திரைப்படங்கள் வெளியாகின்றன அவற்றைப் பற்றிய முன்னோட்டம் உங்களுக்காக
- இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த பிரபல நடிகர் சதீஷ் முதல்முறையாக நாயகனாக நடித்துள்ள படம் ‘நாய் சேகர்’. சதீஷ் ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி நடித்துள்ளார். `மெர்சல்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளராக ப்ரவீன், இசையமைப்பாளராக அஜீஷ் அசோக் என்பவர்கள் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தில் லேப்ரடார் வகை நாய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. முழுக்க முழுக்க காமெடி வகையில் தயாராகியுள்ள ‘நாய் சேகர்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் ரசிகர்களை சிரிக்க வைக்க வருகிறது
- வயதினருக்கான படமாக
என்ன சொல்ல போகிறாய்
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார். டிசம்பர் இறுதி வாரமே திரைக்கு வரவிருந்த இந்தப் படம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கதாநாயகன் அஸ்வின் பேசிய தேவையில்லாத பேச்சுக்கள் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.தற்போது சர்ச்சைகள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்றுவெளியாக உள்ளது.வலிமை’ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அஜித்குமார் (AK) ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், அஸ்வின்குமார் ரசிகர்களோ அந்த AK-வுக்கு பதிலாக இந்த AK வருகிறார் என்று வலைதளங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். இளைஞர்களின் ரசனைக்கு ஏற்பகாதலை மையப்படுத்திஉருவாக்கப்பட்டுள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ ரசிகர்களை என்ன சொல்ல வைக்க போகிறது இன்று மாலை தெரிந்துவிடும்.
3.கார்பன்
விதார்த்தின் 25வது படம் இது. இதேபோல் இதுவரை இரண்டாவது நாயகியாக நடித்துவந்த தன்யா பாலகிருஷ்ணன் தமிழில் முதல்முறையாக நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தை விஜய் ஆண்டனி நடித்த `அண்ணாதுரை’ படத்தை இயக்கிய ஸ்ரீனுவாசன் இயக்கியுள்ளார்
நாயகன் காண்கின்ற கனவு நிஜத்திலும் நடக்க, அப்படி நாயகன் தனது தந்தையை பற்றி காணும் கனவு நிஜமாகிறது. இதன்பின் என்ன நடக்க போகிறது என்பதை கதைக்களமாக கொண்ட ‘கார்பன்’ ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கொடுக்கும் என்கிறது படக்குழு.
- பண்டிகை அன்று குடும்பங்களுடன் திரைப்படம் பார்க்க விரும்புபவர்களுக்கான படமாககொம்பு வச்ச சிங்கம்டா
நடிகர் சசிகுமாரின் திரைப் பயணத்தில் ஒரு நடிகனாக பெரிய வெற்றியை கொடுத்த படங்களில் ஒன்று ‘சுந்தரபாண்டியன்’. தமிழகத்தின் கிராம மக்களிடம் குடும்பங்களில் ஒரு உறுப்பினராக சசிகுமாரை ஏற்றுக்கொள்ள வைத்த இந்த படத்தை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர்கள் கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் படமே ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டின் நடித்துள்ளார். அதேபோல் சூரி, மறைந்த இயக்குநர் மகேந்திரன், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தர் குமார் என்பவர் தயாரித்துள்ள இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே தயாராகியது. ஓடிடி வெளியீடு அல்லாமல் திரையரங்க வெளியீட்டுக்காகக் காத்திருந்து பல முறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக இன்று திரைக்கு வருகிறது சசிகுமாரின் வழக்கமான திரைக்கதை பாணியான கிராமத்து பின்னணியே இதிலும்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கிராமத்து மக்களின் ரசனைக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ தீனி போடும் என எதிர்பார்க்கலாம்
என வெவ்வேறு திரைக்கதை களத்துடன் நான்கு படங்கள் வெளியாகின்றன நாளை பிரபுதேவா நடித்துள்ள தேள் மற்றும் சில படங்கள் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இவை அனைத்தும் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டதால் நாளை வெளியாகவுள்ள படங்கள் பற்றி எதையும் குறிப்பிடவில்லை .