• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஓவர்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன்.
விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படம் 2 பாகங்களாக உருவாகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, ஐதராபாத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியாக இதன் படப்பிடிப்பு பொள்ளியில் நடைபெற்று வந்தது. இதன் படத்தில் நடித்த நடிகர்களும் சமீபத்தில் தங்களுடைய நடிப்பை முடித்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து வந்தனர்.


இந்நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது.