

பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில். குமரி மாவட்டத்தில். பொன். இராதா கிருஷ்ணன் கையில் எடுத்த புதுமையான ஜூலை 1_ம் நாள் “ஜூலை போராட்டம்” ஏழை கிறிஸ்தவ, இஸ்லாமிய பள்ளி மணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவி தொகையை போன்ற கல்வி உதவித்தொகை ஏழை இந்து மாணவர்களுக்கும் வேண்டும் என மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நாகர்கோவிலில் நாகராஜா கோவில் திடலில். ஆண், பெண் என பெரும் கூட்டத்தை கூட்டி வீராவேசமாக பேசிய பேச்சுக்கள்.
2014 – நாடாளுமன்ற பொதுத்தேர்தலில். நடந்த மக்களைத் தேர்தலில். தமிழகத்தில். காங்கிரஸ், திமுக கூட்டணி அமையாத நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனி தனியாக போட்டியிட்டதால் கட்சிகளுக்கு இடையே நடந்த தேர்தலில். காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார், பாஜக சார்பில் பொன்னார் போட்டியிட்டனர்.
மோடி பிரதமர் ஆனால் நாட்டில். பாலும், தேனும் ஓடும். ஜூலை போராட்டத்தை நிறைவேற்றி. எல்லா ஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கச் செய்வேன் என்ற வாக்குறுதியை முன்பை காட்டிலும், கூடுதல் அழுத்தத்துடன் மட்டுமே அல்ல சற்று உரக்கவே சொன்னார் பொது மேடைகளில், பிரச்சாரம் வாகனங்களில்.”ஜூலை”போராட்ட உறுதி மொழி.
2014 பொதுத்தேர்தல் தீர்ப்பு.மன்மோகன் தலைமை காங்கிரஸ் தோல்வி அடைந்தது.மோடி தலைமையிலான ஆட்சியில் இரண்டாவது முறையாக மீண்டும் இணை அமைச்சர் பதவியே பொன்னாருக்கு கிடைத்தது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் உள்ள ஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கிறதோ.? இல்லையோ….. ஜூலை போராட்டம் நடத்திய பொன்னார் வெற்றி பெற்று ஒன்றிய அரசில் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளின் இணை அமைச்சர் என்ற பொறுப்புகளை வகித்த பொன். இராதாகிருஷ்ணன். தமிழகம் முழுமைக்கும் முதல் கட்டமாக ஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வாங்கித் தராது போனாலும். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் முதல் கட்டமாக அவரது வாக்குறுதியான. ஜூலை போராட்ட வாக்குறுதியை நிறைவு செய்வார் என குமரி மாவட்டத்தில் உள்ள பாஜகவினர் மட்டுமே அல்ல அனைத்து பொது மக்களும், அரசியல் கட்சியினரும் நம்பினார்கள்
பொன்னார் 2014 – 2019 ஐந்தாண்டு ஆட்சியில் பொன்னார் அமைச்சராக இருந்தும் வாக்குறுதியை நிறைவேற்றாது, கன்னியாகுமரியில் வர்த்தக துறை முகம் என்ற ஒரு திசை திருப்பில் அமைச்சராக பவனி வந்தார். குமரி மாவட்டம் அதுவரை காணத் தவறாத ஒரு போராட்ட காட்சிகளை பார்த்தது. இதற்கு நடுவே பாஜக சர்வதேச வர்த்தக துறை முகத்திற்கு ஆதரவாக போராட்டங்களை பொன்னாரின் ஆசிர்வாதத்துடன் நடத்தியது. முடிவு?
2019 மக்களைவை பொதுத்தேர்தலில் காங்கிரஸின் வேட்பாளர் வசந்த குமாரிடம், பொன்னார் தோல்வி அடைந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் கன்னியாகுமரி மக்களவைக்கு வசந்தகுமாரின் மரணத்தால் வந்த இடைத்தேர்தலில் வசந்தகுமார் மகன் விஜய் வசந்திடம், பொன்னார் மீண்டும் தோல்வி என்ற நிலையில், நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இன்று (ஜூலை 2_ம்) நாள் நடைபெற்ற குமரி சங்கமம் நிகழ்ச்சியில். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ், திமுகவின் கூட்டணி கட்சிகள். 2024யிலா, அல்லது அதற்கு முன்பே மக்களவைக்கு தேர்தல் வந்தாலும், ஒரு வேளை பொன்னாரே 12-வது முறையாக (ஒரு சட்டமன்ற தேர்தல் எண்ணிக்கை உட்பட) போட்டியிட்டாலும், பெட்ரோல், டீசல், ஜிஎஸ்டி வங்கி கணக்கில் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் என்பதை விட பொன்னாரையும், பாஜகவை நோக்கி குமரியில் எழும் ஒற்றை குரல் “ஜூலை” போராட்டத்தின் வாக்குறுதி தான் என்பதை கன்னியாகுமரி முழுவதிலும் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் இந்த சுவரொட்டி எழுப்பும் கேள்விகள் தான்.
