மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக நடந்துவரும் போராட்டம்,தீ வைப்பு சம்பவங்களில் 250 க்கும் அதிகமான கிறிஸ்தவ தேவாலயங்கள் இடித்து தரைமட்டம் என்ற நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் அரசு கலவரத்தை தடுக்காது,சட்ட ஒழுங்கு மட்டும் அல்ல அனைத்து வகை மனித மாண்புகள் மீறல் கண்டு மௌனம் காக்கும், மாநில பாஜக அரசின் செயலை கண்டித்து. நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், குளச்சல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிள்ளியூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், கத்தோலிக்க திருச்சபையின் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சங்கத்தின் தலைவர் ஆயர் வின்சென்ட் மார்பவுலோஸ், தக்கலை மறைமாவட்ட ஆயர் யார் ராஜேந்திரன், குமரி தென் இந்திய திருச்சபையின் ஆயர் ஏ.ஆர்.செல்லையா இவர்களுடன் பல்வேறு சமுக அமைப்பை சேர்ந்தவர்கள்.கிறிஸ்தவ அருட்பணி யாளர்கள், அருட் பணி கன்னியர்கள் இவர்களுடன் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் ஹெலன் டேவிட்சன்,ஏ.ஆர்.பெல்லார்மின் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு காலையிலிருந்தே பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூட்டம், கூட்டமாக திரண்ட நிலையில் காவலர்கள் கூட்டத்தினரை சாலையின் ஓரத்தில் நிற்கும் படி சொல்லிக் கொண்டிருந்த நிலையில். கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியதும்.சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார்,குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் போராட்டக்காரர்கள்.
கன்னியாகுமரி_திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து போராட்டம் நடத்த முயன்றபோது நாகர்கோவில் டவுன் துணைக் கண்காணிப்பாளர் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் சாலையில் இருந்து ஒதுங்கி நில்லுங்கள் என்றதை போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில்.டவன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இடையே சச்சரவு ஏற்பட்ட நிலையில்.காவல் துறையின் அடக்குமுறை என கூட்டத்தினர் கோசம் எழுப்பிய நிலையில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி அமைதி காத்த நிலையில் மணிப்பூர் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு எதிராக பலரும் கண்டன உரை ஆற்றினார். ஒன்றிய பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்கள்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில். கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில்.கிறிஸ்தவ ஐக்கிய பேரவை தலைவர் ஆயர் வின்சென்ட் மார்பவுலோஸ், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார்,ஜனாப்.எ.மீரான் மைதீன் மற்றும் பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர்.குமரி மாவட்ட வருவாய் அதிகாரியிடம்.கூட்டமைப்பின், ஒன்றிய அரசிற்கான கோரிக்கை மனுவை கொடுத்தார்கள்.