தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு ரொக்கமாக வழங்கலாமா அல்லது நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தலாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேரடியாக வங்கியில் செலுத்த அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் குடும்ப தலைவர்களின் வங்கி கணக்கு தேவைப்படும். அது மட்டுமல்லாமல், வங்கி கணக்கில் அவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு பயன் இல்லாமல் போய்விடும். இதன் காரணமாக நேரடியாக வங்கியில் பணம் செலுத்துவதற்கான ஆலோசனைகளை.. நல்லவை தீமைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம்.
இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பணம் தவிர அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசுக்கான டோக்கன் அடுத்த வாரம் இறுதியில் இருந்து.. பெரும்பாலும் 20ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.