• Thu. Apr 25th, 2024

புரவி எடுப்பு விழாவை புறக்கணித்ததால் காவல்துறை அலுவலகம் முற்றுகை

By

Aug 27, 2021 , ,

சிவகங்கை அருகே உள்ளது இலுப்பக்குடி கிராமத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் அய்யனார் கோவிலுக்கு புரவி எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். கொரானா கட்டுப்பாடை முன்னிட்டு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு புரவி எடுப்பு விழாவை நடத்துவதாக கிராமத்தினர் முடிவு செய்தனர்.

இந்நிலையில் புரவி எடுப்பு விழாவில் ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினர் என புறக்கணித்த நிலையில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட தரப்பினரான வட்டாட்சியர், காவல் துறை அதிகாரிகளிடம் முறையிட்டார் .இதனையடுத்து அதிகாரிகள் இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரைகளை வழங்கினர்.

ஆனால் புறக்கணிக்கப்பட்ட நபர்கள் கலந்து கொள்ளாமல் மற்றொரு தரப்பினரை மிரட்டியதாக கூறப்பட்ட நிலையில், புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையை முற்றுகையிட்டனர். பிறகு காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கிராம மக்களை சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகு கிராமத்தினர் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *