
அறிவியல் மற்றும் புதுமைகளைத் தொடர்ந்து பிரபலப்படுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
1928 பிப்ரவரி 28-ம் தேதி தேதி இந்திய இயற்பியலாளர் சர் சி.வி.ராமன், ராமன் விளைவைக் கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. அவரது கண்டுபிடிப்புக்காக, சர் சி.வி. ராமனுக்கு 1930-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அறிவியலில் ஆர்வமுள்ளவர்களுக்கு, குறிப்பாக நமது இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு தேசிய அறிவியல் தின வாழ்த்துக்கள். அறிவியல் மற்றும் புதுமைகளை தொடர்ந்து பிரபலப்படுத்துவோம், மேலும் ஒரு விக்ஸித் பாரத்தை உருவாக்க அறிவியலைப் பயன்படுத்துவோம்.
இந்த மாத மன்கிபாத் நிகழ்ச்சியில், இளைஞர்கள் ஏதேனும் ஒரு அறிவியல் செயல்பாட்டில் பங்கேற்கும் ‘ஒரு விஞ்ஞானியாக ஒரு நாள்’ பற்றிப் பேசினோம்” என தெரிவித்துள்ளார்.
