• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஊருக்குள் புகுந்த காட்டெருமை மாயம் !!!

BySeenu

Apr 28, 2026

கோவையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து மாயமாகிய காட்டு எருமையை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை வனசரகத்திற்கு உட்பட்ட கெம்பனூர் சுற்றுப் வனப் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக காட்டெருமை சுற்றி வருகிறது. அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள பள்ளத்திற்கு வந்து கொண்டு இருந்தது. கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அட்டுக்கல் பெரும்பள்ளத்தில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த மூதாட்டியை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். அதன்பின் வனத்துறையினர் காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அதன் பின்னும் அட்டுக்கல், தாளியூர் வன எல்லையில் சுற்றி திரிந்தது. இந்நிலையில் நேற்று காலை அந்த காட்டெருமை தொண்டாமுத்தூர் – மாதம்பட்டி சாலையில் உள்ள மோகன் என்பவரின் பாக்கு தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு வந்த வனத்துறையினர் காட்டெருமையை கண்காணித்தனர். அப்போது காட்டெருமை அருகில் இருந்த புதருக்குள் சென்று மாயமானது. அதன் பின் காட்டெருமை தென்படவில்லை, வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.