• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

Sep 7, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் திடியன் கிராமம் எட்டு நாட்டிற்கு முதல் நாடு திடியன் நாட்டைச் சேர்ந்த வலங்காகுளம் பூண்டி தேவர் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அழகர் கோயில் 18ஆம் படி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த நேற்று மாலை 3 மணி முதல் 4.30 மணி குள் பெட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை ஆறு முப்பது மணி அளவில் விக்னேஷ்வர பூஜையுடன் முதலாம் காலயாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு மகாயாகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு கோவில் முன்பு இருந்த கலையரங்கில் வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது இன்று காலை இரண்டாம் காலயாக பூஜையுடன் தொடங்கி மகாயாகம் நடைபெற்றது.

தொடர்ந்து பூர்ணாஹீதி நடைபெற்று யாக பூஜை நிறைவு பெற்றது தொடர்ந்து அர்ச்சகர்கள் தீர்த்த குடங்களை சுமந்து கோவிலை சுற்றி வளம் வந்து கோபுர கலச பகுதிக்கு வந்தடைந்தனர் அப்போது கருடன் வானத்தில் வட்டமிட்டது இதனை தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வலங்காகுலம் திடியன் மற்றும் செல்லம்பட்டி உசிலம்பட்டி மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து பொதுமக்கள் மீதுபுனித நீர் தெளிக்கப்பட்டது.

பின்னர் 18-ம் படி கருப்புசாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நாள் முழுவதும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கும்பாபிஷேக ஏற்பாடுகளை வலங்காகுலம் பூண்டி தேவர் வகையறாக்கள் மற்றும் பங்காளிகள் பொதுமக்கள் செய்திருந்தனர். காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.