• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக அகற்றிய ப்ளக்ஸ் பேனர்கள்

ByP.Thangapandi

Feb 14, 2025

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உசிலம்பட்டி நகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட ப்ளக்ஸ் பேனர்களை நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக அகற்றினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதியில் அமைந்துள்ளது.,

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் வந்து செல்லும் உசிலம்பட்டியின் பிரதான சாலையோரங்களில் ப்ளக்ஸ் பேனர்கள் அதிகமாக வைக்கப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, விபத்தை ஏற்படுத்தும் சூழலில் பேனர்கள் வைக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில்,

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவின் பேரில் இன்று உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட ப்ளக்ஸ் பேனர்களை நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக அகற்றினர்.

அரசியல் பிரமுகர்கள், விளம்பர பேனர்கள், இல்ல விழாக்களின் பேனர்கள் என பாகுபாடின்றி அகற்றப்பட்ட சூழலில், நகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத பகுதிகளில் பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்படும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.