தெலுங்கானாவில் பயிற்சியின்போது விமானம் கீழே விழுந்ததில் தமிழகத்தை சேர்ந்த விமானி உள்பட இருவர் உயிரிழப்பு.
தெலுங்கானாவில் பயிற்சியின்போது சிறிய ரக விமானம் கீழே விழுந்ததில் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி பெண் விமானி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சியா அல்லது தனியார் பயிற்சியா என்பது குறித்து விரிவான தகவல் வெளியாகவில்லை.
ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து சென்று கொண்டியிருந்த போது பயிற்சி விமானம் தெலுங்கானாவில் உள்ள நல்கொண்டா என்ற பகுதியில் விபத்தை சந்தித்துள்ளது. பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விமானி மகிமா உள்பட இருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் மேலெழும்ப முடியாமல் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.