• Fri. Jan 24th, 2025

வேலை வாய்ப்பு முகாம் – மடீட்சியா-ரோட்டரி அமைப்பு

ByKalamegam Viswanathan

Dec 26, 2024

மடீட்சியா – ரோட்டரி அமைப்பு இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் 28ஆம் தேதி மதுரையில் நடக்கிறது.

மடீட்சியா அமைப்பும் ரோட்டரி இயக்கமும் இணைந்து நடத்தும் மெகா வேலை வாய்ப்பு முகாம் வருகிற 28ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மதுரை மடீட்சியா அரங்கில் நடைபெற உள்ளது.

இது குறித்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி கூறியதாவது..,

வாகை ஜாப் பேர் என்ற பெயரில் நடைபெறும் இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட வேலை தேடுவோர் இதில் பதிவு செய்துள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் பட்டதாரிகள் டிப்ளமோ ஐடிஐ திறன் பயிற்சி 10 12 ஆவது படித்து முடித்த மாணவர்கள் ஆகிய அனைவரும் கலந்து கொள்ளலாம். ஏற்கனவே மதுரையை தளமாகக் கொண்ட 30 நிறுவனங்கள் தங்கள் பங்கேற்பை உறுதி செய்து உள்ளன. மேலும் இதில் 500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு தேடுபவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்ய நிறுவனங்களுக்கு தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ள .. 2024 இல் தேர்ச்சி பெற்றவர்களும் தங்கள் விண்ணப்பத்துடன் பங்கேற்கலாம். ஐடி கணக்குகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கண்டன்ட் கிரியேட்டர் இன்ஜினியரிங் நர்சிங் போன்ற பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் உள்ளன. நிறுவனங்கள் மாத சம்பளம் ரூபாய் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். தேர்வு செயல்முறை மற்றும் நேர்காணலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாலைக்குள் பணி நியமன ஆணை கடிதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி தெரிவித்தார்.

வேலை வாய்ப்பு முகாமினை மடீட்சியா தலைவர் கோடீஸ்வரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக பங்கே இருக்கிறார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் நியமனம் லியோ பெலிக்ஸ் லூயிஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். நிகழ்வில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் சுரேந்திரன் மக்கள் தொடர்பு பொறுப்பாளர் டாக்டர் சீனிவாசன் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட தலைவர் சிவசங்கர் சேர்மன் கோபிசன் ஒருங்கிணைப்பாளர் தாஸ் மற்றும் ஆனந்தகுமார் பில்லி சூர்யா ஆகியோர் செய்துள்ளனர்.