• Fri. Mar 29th, 2024

காங்கிரஸ்க்கு நோ சொன்ன பிகே

காங்கிரஸில் இணைய தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரன்தீப் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“பிரசாந்த் கிஷோர் பரிந்துரைகளை அளித்த பிறகு பரிசீலித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குழு அமைத்துள்ளார். காங்கிரஸில் சேரவும், அதிகாரம் பெற்ற குழுவில் இணையவும் பிரசாந்த் கிஷோருக்கு விடுத்த அழைப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.கட்சிக்கு அவர் ஆலோசனைகளை நாங்கள் பாராட்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு இறுதியில் ஹிமாசல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோதலும், வரும் 2024-இல் மக்களவைத் தோதலும் நடைபெறவுள்ளது. இந்தத் தோதலுக்குள் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் கட்சித் தலைமை இறங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக, பிரசாந்த் கிஷோா் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளாா். அந்த ஆலோசனைகள் குறித்து ஆராய்ந்த 8 போ கொண்ட காங்கிரஸ் குழு, கடந்த வாரம் தங்களது அறிக்கையை தலைமையிடம் வழங்கியுள்ளது.இதைத் தொடர்ந்து, பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சோத்துக் கொள்வது குறித்து மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்திய நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் இந்த டிவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

மேலும் இதனை பிரசாந்த் கிஷோரும் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதிபடுத்தி உள்ளார்.அவரது பதிவில் EAG இன் ஒரு பகுதியாக கட்சியில் சேரவும் மற்றும் தேர்தல்களுக்கு பொறுப்பேற்கவும் காங்கிரஸின் தாராளமான வாய்ப்பை நான் நிராகரித்தேன்.

எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் என்னை விட கட்சிக்கு தலைமை தேவை , ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்பு பிரச்சனைகளை கூட்டாக சீர்திருத்தங்கள் மூலம் சரி செய்ய வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *