• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கடந்த ஆண்டை விட வசூலை வாரி குவித்த டாஸ்மாக்

டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் 2,200 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்றும், 2020-21ஆம் ஆண்டில் மொத்தமாக 33,811 கோடி ரூபாயும், நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் வரை மட்டும் 36,013 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத்தில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் நிலையில், டாஸ்மாக் வருவாய் தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நடப்பாண்டில் (மார்ச் வரை) 2,200 கோடி ரூபாய் அதிகமாக டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

2020 -2021ம் ஆண்டில் மொத்தமாக ரூ.33,811 கோடி டாஸ்மாக் மூலம் வருவாயாக கிடைத்துள்ளது.

நடப்பு ஆண்டில் (மார்ச் வரை) மட்டும் ரூ.36,013 கோடி மதுபானம் மூலம் வருவாயாக கிடைத்துள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.