• Fri. Apr 19th, 2024

டாஸ்மாக் மண்டல அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் -செயற்குழுவில் தீர்மானம்

Byp Kumar

Jan 26, 2023

பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்க கோரியும் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மதுரைமாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ராஜா தலைமையிலும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் சரவணகுமார்,மணவாளன் அன்பழகன், ரமேஷ், செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் தலைவர் பாலுசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் மதுரை திண்டுக்கல் கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பின்னர் செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் பாலுச்சாமி கூறியது கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் குறைவான சம்பளம் பெற்று வருகின்ற ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை ஊதியம்வழங்க வேண்டும். துறை அமைச்சரின் பெயரை சொல்லி கரூரைச் சேர்ந்த சிலர் தமிழக முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கமிஷன் கேட்டு மிரட்டி பணம் பெற்று வருகிறார்கள்.ஆளுங்கட்சிக்காரர்கள் சமூக விரோதிகளும் பார் உரிமையாளர்களும் பணியாளர்களை மிரட்டி பணம் பெற்று வருகின்றனர் இவற்றினை அரசு உடனடியாக தடுக்க வேண்டும்.டாஸ்மாக் நிர்வாக சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது நிர்வாகத்தை சீரமைத்திட நிர்வாக சீரமைப்பு குழு ஒன்றை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைத்திட வேண்டும் எனவும் கோரிக்கை வலியுறுத்தி நடைபெற உள்ள தமிழக அரசு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது டாஸ்மாக் மண்டல அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்திட செயற்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *