• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு யானைகள் அணிவகுப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகள் அணிவகுப்புடன் இந்திய 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது. முதுமலை குளியல் காப்பக யானைகள் வளர்ப்பு முகாமில் கொடி ஏற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதுமலை துணை கள இயக்குனர் வித்யா வளர்ப்பு யானைகள் அணிவகுப்பில் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வை உள்ளூர் வெளியூர் சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு கண்டு மகிந்தனர்.. இந்த நிகழ்ச்சியில் வன காப்பாளர்கள் வனவர்.தீ தடுப்பு குழ .யானை கண்காணிப்பு குழு யானை பாகன்கள் என அனைவரும் உடன் இருந்தனர்