தமிழக முதல்வர் அதிமுக கழக நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சி தலைவி அம்மா ஆட்சியில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது.
சாத்தூர் நகராட்சியில் அமைந்துள்ள புரட்சி தலைவி அம்மா பெயரில் உள்ள அம்மா உணவக விளம்பர பலகையில் இருந்து அம்மாவின் படத்தை திமுகவின் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் அகற்றினர்.இதனை அறிந்த கழக நிர்வாகிகள் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் Ex-மாவட்ட கவுன்சிலர் K.S.சண்முகக்கனி மற்றும் சாத்தூர் நகர கழக செயலாளர் Ex- நகர் மன்ற உறுப்பினர் MSK.இளங்கோவன் தலைமையில் சாத்தூர் நகராட்சி ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
நாளை(31-12-21)க்குள் அம்மா உணவக விளம்பர பலகையில் அம்மா படத்தை வைக்கப்படவில்லை என்றால் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் தலைமையில் மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் S.T.முனீஸ், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சீத்தாராமன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி பொருளாளர் தங்கராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கருத்தப்பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை யூனஸ் முஹம்மத், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் சுப்புராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் சுப்ரமணியன், சாத்தூர் நகர கழக பொருளாளர் குமார்,சாத்தூர் நகர எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் முத்துப்பாண்டி, சாத்தூர் நகர Ex-சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் முகமது ரபீக், மேலப்புதூர் கிளை கழக செயலாளர் செல்வேந்திரன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் சசி, ஹவுசிங் போர்டு கிளை கழக செயலாளர் கண்ணன்,சின்னகாமன்பட்டி கிளை கழக செயலாளர் சந்திரன், சின்னகாமன்பட்டி கிளை கழக பொருளாளர் கந்தராஜ், கழக பிரமுகர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.