இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில் உருவாகி வருகிறது. இதற்கு பல்வேறுவிதமான எதிர்ப்புகள் வந்தாலும் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
அமெரிக்க சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு வந்ததும் அவசர அவசரமாக கட்டுமான பணிகளை செப்டம்பர் 26 ஆம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார் பிரதமர் மோடி. சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்த பிரதமர் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இதனிடையே இயக்குனர் அவினாஷ் தாஸ் ‘நாளைய புகைப்படம்’ எனும் தலைப்பில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டார்.

புகைப்படத்தில் பிரதமர் மோடி உயரமாக நிற்பதும், அவரின் எதிரே புகைப்பட கலைஞர் தரையில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுக்கும் காட்சியும் இடம்பெற்று இருக்கிறது. இந்த புகைப்படத்தை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதை ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்தது. இணைய வாசிகளால் எடிட் செய்து மாற்றப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்களின் உண்மையான புகைப்படத்தை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதே புகைப்படங்களை மத்திய மந்திரி பியூஷ் கோயலும் பதிவிட்டார். இவற்றில் பிரதமர் மோடி மட்டுமே காணப்படுகிறார்.