• Sat. Apr 27th, 2024

சதத்திலிருந்து குறையாத பெட்ரோல் விலை..

100-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

ஆனால்,கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,100-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

100-வது நாளாக விலையில் மாற்றம் இல்லை என்றாலும் கூட,பெட்ரோல் விலை 100-ஐ கடந்தும்,டீசல் விலை ரூ.90-ஐ தாண்டியும் விற்பனை செய்யப்படுவது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது.இதனால்,பெட்ரோல்,டீசல் விலை மேலும் குறைக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *