கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் பணியில் இருக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி அடைய வேண்டும் அப்படி தேர்ச்சி அடைந்தால் மட்டுமே பணி தொடமுடியும்.

அதாவது ஓய்வு பெற 5 ஆண்டிற்குள் இருந்தால் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளித்தும் ஓய்வுபெற 5 ஆண்டுற்கு மேல் இருந்தால் அவர்கள் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி அடைய வேண்டும் என்றும் மூன்று ஆண்டிற்குள் தேர்ச்சி அடைய வேண்டும் என்று கால அவகாசத்தை நிர்ணயத்து உத்தரவு பிறப்பித்தது இந்த நிலையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்து கருத்துக்கள் ஆலோசனைகளை கேட்டறிந்தார்கள். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு தனியாக சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
எவ்வாறெல்லாம் வினாக்கள் கேட்கப்பட வேண்டும் மதிப்பெண்கள் எப்படி பட்டியலிட பட வேண்டும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது , சென்ற ஆட்சியில் தேர்வு எழுதும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு உள்ளிட்ட சங்கங்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் விதிமுறையில் மாற்றம் செய்து இட ஒதுக்கீட்டை பின்பற்றி தேர்வு நடத்த ஆணையிட்டு பொது பிரிவினருக்கு 90 மதிப்பெண்ணும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 75 மதிப்பெண்ணும் ஆதிதிராவிடர் , அருந்ததியர் மற்றும் மாற்று திறன் ஆசிரியர்களுக்கு 60 மதிப்பெண் என்று மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு தேர்வு நடைப்பெற்றது.
இதன் விளைவாக பணியாற்றும் பல ஆசிரியர்கள் தேர்ச்சி அடைந்தனர் என்பதை அனைவும் அறிவார்கள் , அதனை தொடர்ந்து தற்போதைய அரசும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பணியாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு தனியாக சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை அறிவித்து கடந்த ஜூன் மாதம் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தாள் ஒன்று தாள் இரண்டு நடபெறும் என்று அறிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை வரவேற்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்தோம் தேர்வும் நடந்தது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு தாள் ஒன்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள் இரண்டுஎன இரண்டு நாட்கள் தேர்வு நடத்தப்பட்டது, சிறப்பு தகுதி தேர்வாக இல்லாமல் மிகவும் கடினமாக வேலை நாடுனருக்கான தேர்வை காட்டிலும் மிகவும் கடினகாக இருந்தது 95% விழுக்காடு வினாக்கள் பாடப்பரிவில் கேட்கப்படாமல் வெளியில் இருந்து கேட்கப்பட்டதால் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததுதேர்வு எழுதிய ஒட்டுமொத்த ஆசிரியர்களும் மிகுந்த அதிர்ச்சியும் வேதனை அடைந்தார்கள் இது எதை காட்டுகுறது என்றால் ஓட்டபந்தைய போட்டியில் ஒரு விளையாட்டும் வீரர் 100 மீட்டரை கடக்க 10 வினாடிகளில் கடந்தால் தான் வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியும் என்ற விதிய ஏற்படுத்தி வெற்றி பெற்றவராக அறிவித்து பதக்கம் பெறுவார்.
இதே நிலையில் அவருக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் பயிற்சியாளராக தொடர வேண்டுமானால் 100 மீட்டர் ஓட்ட பந்யத்தை ஏற்கனவே விளையாட்டு வீரர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட10 வினாடிக்குள் இலக்கை அடைந்தால் தான் பயிற்சியாளராக தொடரமுடியும் என்பதை போன்று சிறப்பு தகுதித்தேர்வு வினாக்கள் இருந்தது என்பதை உண்மை இந்த உதாரணத்தை முன்வைத்து தான் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு தகுதித் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்ற திறனை கண்டறிந்து செய்முறை தேர்வுற்கு 20% விழுக்காடு மதிப்பெண்ணும் பணிமூப்பிற்கு 5% விழுக்காடு மதிப்பெண்ணும் வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு 75% விழுக்காடு பாடத்திட கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு பயிற்றவிக்கும் பாடத்திட்டத்தில் இருந்து 75% விழுக்காடுகள் கேல்விகள் கேட்கபட வேண்டும் என்றும் இது வேலை நாடுநருக்கான தேர்வு இல்லை என்பதால் ஒரே சராசரியான மதிப்பெண் வழங்கி தேர்ச்சியை அறிவிக்க வேண்டும் அல்லது அனைத்து பிரிவினருக்கும் 5% விழுக்காடு மதிப்பெண் குறைக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கேட்டுக்கொண்டோம்.
அதனையே மீண்டும் நினைவூட்ட கடமைப்பட்டு இருக்கிறோம். இனிவரும் சிறப்பு தகுதி தேர்வில் தமிழ்நாடு அரசு ஊழியரகள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு ,நிறைவேற்றிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ஆ.ராஜ்மோகன் அவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்



