• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

லிட்டருக்கு ரூ.35 அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை!!

ByA.Tamilselvan

Jan 30, 2023

பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் கடுமையான சூழலை சந்தித்துள்ளது. இதனால் பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்விலை அதிகரித்து வருகிறது
பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ள பாதிப்பு ஆகியவை மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளன. தற்போது அந்நாட்டு அரசிடம் இருக்கும் வெளிநாட்டு பணத்தை வைத்து இரண்டு மாத காலத்துக்கும் குறைவான தேவையை மட்டும் பூர்த்தி செய்ய முடியும். இந்தநிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டர் அந்நாட்டு நாணய மதிப்பில் ரூ.249. 80-க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.262.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மட்டுமின்றி மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு 18 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இலங்கையிலும் இதுபோன்ற சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்நாடு திவாலானது. மக்கள் போராட்டம் வெடித்தது. அதே போன்ற சூழல் பாகிஸ்தானுக்கும் வரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.