• Fri. Apr 26th, 2024

விரைவில் வருகிறது மதுரை மெட்ரோ ரயில்

ByA.Tamilselvan

Jan 30, 2023

மதுரைக்கான மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக மிக நெரிசல் மிகுந்த நகரமாக மதுரை மாறியிருக்கிறது. தென் தமிழகத்தின் முக்கிய நகரம் மதுரை. எனவே கன்னியாகுமரி ,நாகர்கோயில் பகுதியை சேர்ந்த பயணிகள் திருமங்கலம் பகுதியில் இறங்கி மதுரை நகருக்குள் மாநகரபேருந்து மாறி செல்கின்றனர். அதிலும் காலை நேரத்தில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்கள் பயணிப்பதால் கூட்ட நெரிசல் நாளுக்கநாள் அதிகமாகி வருகிறது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை போதுமானதாக இல்லை. எனவே சென்னையே போலவே மதுரையிலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டு, அது குறித்த சாத்தியகூறுகள் ஆய்வு செய்யப்பட்டது.இந்நிலையில் மதுரைக்கான மெட்ரோ ரயில் சாத்தியக்கூறு ஆய்வுகள் முடிந்து தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ..மதுரைக்கு மெட்ரோ ரயில் சாத்தியம் என முடிவுகள் வெளிவந்துள்ளது
மதுரை மாவடத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை முதல் வழித்தடம் இருக்கும்.
திருமங்கலம் – திருப்பரங்குன்றம் – திருநகர் – பழங்கா நத்தம் (வசந்த நகர் )பகுதியில் இருந்து கோரிப்பாளையம் வரை உள்ள 5 kms தொலைவுக்கு சுரங்க பாதை அமையும் .பிறகு மாட்டுதாவணி, நீதிமன்றம், ஒத்தகடை வரை வழித்தடம் இருக்கும்.
மொத்த தொலைவு : 31 kms,திட்ட மதிப்பு : 8000 கோடி.,வரும் தமிழக பட்ஜெட் இல் இந்த மதிப்பு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.இதற்க்கு பிறகு Detailed Project Report இருக்கும்.அவை எங்கு ஸ்டேஷன் அமைய வேண்டும், எங்கு பாலங்கள் அமைய வேண்டும் என்ற அறிக்கை இனி தொடங்கும். அந்த அறிக்கை முடிய 10 மாதங்கள் ஆகலாம். ஆக மொத்தத்தில் அடுத்த வருடம் மே மாதத்திற்கு பிறகு மெட்ரோ ரயில் பணிகள் மதுரையில் வேலை தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *