• Tue. Apr 23rd, 2024

ராணுவ வீரரை கொலை செய்தவர்களை கைது செய்ய கோரி தேனி கலெக்டரிடம் மனு .

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ராணுவ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரை கூலிப்படையை வைத்து கொலை செய்தவரை கைது செய்யக்கோரி தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சுக்காங்கல்பட்டியில் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமசாமி மனைவி நல்லம்மாள்,
இவர், தேனி ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று வழங்கு வதற்காக குடும்பத்துடன் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு புறப்பட்டு வந்திருந்தார்.

அப்போது இவரது இரண்டாவது மகன் கருப்பசாமி என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்ந்ததாகவும், அங்கு வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அன்று ஆந்திரா மாநிலம் பொந்தூர் ரயில் நிலையம் அருகில் கொலை செய்யப்பட்டு கிடந்தாக கூறப்படுகிறது.

ஆனால் கடந்த 8 ஆண்டுகளாகியும் கருப்பசாமியை கொலை செய்த வின்செண்ட் என்ற வன்னியரசு, எஸ்ஐ கருப்பசாமி பாண்டியன், வைரமுத்து, முத்துலட்சுமணன், முத்துலட்சுமணன் மகன்கள் ரமேஷ்குமார், மணிராஜா உள்ளிட்டோர்களை கைது செய்யக்கோரி
கோரிக்கை மனுவினை
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் அவர்களிடம் வழங்கினார்கள்.

இதற்கு முன்னதாக கருப்பசாமி குடும்பத்தினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்த கருப்பசாமி புகைப்படத்தை வைத்து எங்களுக்கு நீதி வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.தொடர்ந்து உருவப் படத்தை வைத்து தனது மகனுக்கு நீதி வேண்டும் கேட்டு தாய் ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்து தேனி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தார்.

மனுவை வாங்கிய தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த ராணுவ வீரரை கொலை செய்தவர்களை முறையாக கைது செய்ய நான் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறியுள்ளார்.

பேட்டி: முத்துச்சாமி (கொலை செய்யப்பட்டவரின் அண்ணன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *