இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் பராமரிப்பு இல்லாத வீடுகளால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால் புதிய வீடுகள் கட்டி தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
மதுரை திருவாதவூர் பகுதியில் 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்நிலையில் 31ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அப்போது கட்டப்பட்ட வீடுகள் முழுவதிலுமாக சேதமடைந்துள்ளதோடு, வீடுகள் நெருக்கமாக இருப்பதால் மக்கள் தொகை அதிகரித்த நிலையில் போதிய தங்குவசதி இல்லாத சூழல் நிலவி வருகிறது.

மறுவாழ்வு முகாமில் அடுத்தடுத்த வீடுகள் மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளதன் காரணமாக ஒரே குடும்பத்தில் 5க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளதால் வீட்டிற்குள் தங்க முடியாத நிலை உள்ளதோடு, கழிவுறை வசதிகள் இல்லாத நிலையில் வெளிப்புறங்களில் இயற்கை உபாதைகளுக்கு செல்லும் நிலை உள்ளதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், கழிவுநீர் வெளியேற முடியாத நிலையில் கடைமையான துர்நாற்றம் வீசுவதோடு, டெங்கு போன்ற தொற்று நோய்கள் உருவாகும் நிலை உள்ளது.
மேலும் வீடுகள் நெருக்கமாக உள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் சிலர் உயிரிழந்த நிலை ஏற்பட்டது.தமிழக அரசு 110விதியின் கீழ் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சீரமைப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதன் மூலமாக தங்களது மறுவாழ்வு மையத்தை சீரமைத்து புதிய வீடுகள் கட்டிதர கோரியும், அடிப்படை வசதிகளை செய்து தர கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.