• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரி மனு..,

ByKalamegam Viswanathan

Aug 17, 2026

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17ல் நடைப்பெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது
கும்பாபிஷேகம் நடைபெறும் நாள் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கோரியும்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழாவை சிறப்பிக்க வேண்டியும் மாவட்ட ஆட்சியரிடம்
திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மனு அளித்தார்.

இது குறித்து திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் செய்தியாளர்களிடம் பேசும்போது

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தமிழ்நாட்டின் ஆன்மிகம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குகிறது. உலகப் பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா நடைபெறும் செப்டம்பர் 17ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து, பொதுமக்களும் பக்தர்களும் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறும் தமிழக அரசையும் மதுரை மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அதோடு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், போக்குவரத்து, பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திட தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் வேண்டும் என்றார். மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும் என்றார்.