• Tue. Aug 18th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

162 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு விழா..,

ByKalamegam Viswanathan

Aug 17, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 162 பேர்,திருமங்கலம் கல்வி மாவட்ட அளவில் குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

2026 – 27 ஆம் கல்வியாண்டிற்கான திருமங்கலம் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற குறுவட்ட போட்டியினை Pஅம்மாபட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஏற்று நடத்தியது. பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவியர்கள் பங்கேற்ற நிலையில் ,கால்பந்து, ஹாக்கி, இறகுப்பந்து,கையுந்து பந்து,பூப்பந்து ,சதுரங்கம், சிலம்பம் மற்றும் தடகள போட்டிகளில் கலந்து கொண்டு திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 162 பரிசினை பெற்றுள்ளனர்.

இதில் குறிப்பாக 8 தங்கம் , 7 வெள்ளி , 6 வெண்கலம் ஆகிய மொத்தம் 21 பதக்கங்களையும் ,குழு போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்கள் அனைவரையும் இன்று பள்ளி தலைமை ஆசிரியர் அருள்ஜோதி தலைமையில் மாணவிகள் முன்னிலையில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயராம்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் அன்னபூரணம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஜாகிர் உசேன் உடற்கல்வி ஆசிரியர்கள் நவமணி,பாலின், சர்மிளா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் பாராட்டினர்