• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

ஆசிரியை வாயில் துணியை வைத்து கட்டிப்போட்டு 6 பவன் நகை கொள்ளை..,

ByKalamegam Viswanathan

Aug 17, 2026

​மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராஜலட்சுமி, அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

​ ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், மதிய வேளையில் ராஜலட்சுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, முகத்தை மறைக்கும் வகையில் பர்தா அணிந்து வந்த இரண்டு பெண்கள், திடீரென வீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தனர்.

​தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியை ராஜலட்சுமி சுதாரிப்பதற்குள், அவரது வாயில் துணியை வைத்து அடைத்து, கை மற்றும் கால்களைக் கட்டிப் போட்டுள்ளனர். பின்னர் அவரைப் பயங்கரமாகத் தாக்கிய அந்தப் பெண்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.

​பட்டப்பகலில், சோழவந்தான் மையப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்க்குள் புகுந்து பெண்ணைக் கட்டிப்போட்டு நகையைப் பறித்து சென்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

​ சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சோழவந்தான் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய அந்த இரண்டு பெண்களை தீவிரமாக தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.