• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி 58 கால்வாயில் கடமடை கண்மாய்க்கு தண்ணீரை கொண்டு செல்ல, விவசாயிகள் கோரிக்கை மனு

ByP.Thangapandi

Jan 18, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் 58 கிராம கால்வாயில் வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் ஒவ்வொரு கண்மாய்களுக்கும் சென்று கண்மாய்கள் நிரம்பி வருகின்றனர்.,

58 காலவாயின் 33 கண்மாய்களில் கடமடை கண்மாயாக உள்ள சடச்சிபட்டி கண்மாய்க்கு செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த சூழலில், தற்போது 58 கிராம கால்வாயில் தண்ணீர் வரும் போதே கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சடச்சிபட்டி கண்மாய்க்கு தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும் என சடச்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜதுரை தலைமையில் சடச்சிபட்டி கண்மாய் மூலம் பாசன வசதி பெரும் விவசாயிகள் மற்றும் 58 கால்வாய் விவசாய சங்கத்தினர் இணைந்து உசிலம்பட்டி வட்டாச்சியர் சுரேஷ் இடம் கோரிக்கை மனு அளித்தனர்.