• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

மதுரையில் வாகன சோதனையின் போது மது போதையில் சிக்கிய வாலிபருக்கு 10000ரூபாய் அபராதம், போலீசார் விசாரணை

ByKalamegam Viswanathan

Jan 18, 2024

மதுரை பைபாஸ் சாலை காளவாசல் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவலரகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, புது விளாங்குடி சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் சந்தேகப்படும் படி நிதானம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். உடனே அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் தாஜுஸ், நித்தியானந்தத்தை சோதனை செய்த பொழுது மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு சுமார் 10,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அவரது வாகனத்தை சோதனை செய்த பொழுது அவரிடமிருந்து சுமார் 75 கிராம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போக்குவரத்து உதவி ஆய்வாளர் நித்தியானந்தத்தை மதுரை எஸ் எஸ் காலனி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கஞ்சா எங்கிருந்து வந்தது, யாரிடம் வாங்கப்பட்டது என குறித்து எஸ் எஸ் காலனி போலீசார் நித்தியானந்தத்தை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் ஓட்டி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.