• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் – முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

ByKalamegam Viswanathan

Jan 18, 2024

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் நடைபெறும். பொது கூட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை அழைக்கும் விதமாக மேற்கு மாவட்ட முழுவதும் ஆட்டோ வாகன மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளும் பணியை முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர் பி உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். சோழவந்தான் அருகே நகரி பகுதியில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அம்மா கிச்சன் மூலமாக தொடர்ந்து ஐந்தாவது நாட்களாக அன்னதானம் வழங்கி வரும் வழங்கும் பணியை பார்வையிட வந்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அங்கிருந்து பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம். வி. கருப்பையா, கி. மாணிக்கம் தமிழரசன், எஸ். எஸ். சரவணன் ஒன்றிய செயலாளர்கள் வாடிப்பட்டி தெற்கு கொரியர் கணேசன், வடக்கு காளிதாஸ் மதுரை மேற்கு அரியூர் ராதாகிருஷ்ணன், அலங்காநல்லூர் ரவிச்சந்திரன் மற்றும் வாடிப்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி, ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், பேரூர் செயலாளர் முருகேசன் அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல் மற்றும் விவசாய அணி வாவிடமருதூர் ஆர். பி. குமார் மாவட்ட பிரதிநிதி அலங்கை முரளி குருவித்துறை வழக்கறிஞர் காசிநாதன், சித்தாலங்குடி ஜெயக்குமார், கேபிள் மணி, தியாகு குருவித்துறை விஜய் பாபு மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.