
குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தெடர் மழையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் தடுப்பணையில் இரண்டு மாணவர்கள் தவிறி விழுந்து கரையேற முடியாது தவித்ததை பார்த்த பீட்டர் ஜான்சன் தண்ணீரில் குதித்து தடுப்பணை தண்ணீரில் தத்தளித்த மாணவர்கள் மனோ(17) அகிலேஷ் (12) ஆகியோரக் காப்பாற்றி கரை சேர்த்த பீட்டர் ஜான்சன் தண்ணீரில் சிக்கி மரணம் அடைந்த நிகழ்வு, ஒட்டுமொத்த குமரி மாவட்டத்தையே சோகமாக்கிவிட்டது.

பீட்டர் ஜான்சன் உயிர் தியாகம் செய்த தகவல் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இரண்டு மாணவர்களை காப்பாற்றிய பீட்டர் ஜாசனால் தண்ணீரில் இருந்து கரை ஏற முடியாது நீரில் மூழ்கி மரணம் அடைந்த பீட்டர் ஜான்சன் வீட்டிற்கு சென்ற குமரி ஆட்சியர் அழகு மீனா.பீட்டர்ஜ்ன்சனின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பீட்டர் ஜான்சனின் உயிர் தியாகத்தை போற்றிய முதல்வர் குடும்பத்தினரின் நிவாரண நிதியாக ரூ.10_லட்சத்தை கொடுத்துள்ளார்.

